Pages

Sunday, January 15, 2006

பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்- சில குறிப்புகள்!

சூர்யா!
பொங்கல் தினத்தன்று 'அண்ணனுக்கு ஜே' என்ற தலைப்பில் நடிகர் சூர்யாவுடன் ஒரு நாள் சுற்றினார்கள் விஜய் டிவி யில். மேக்கப் எதுவும் இல்லாமல், சாதாரண நடுத்தர தரப்பினரை சேர்ந்த ஒரு பிள்ளையாக, வலம் வந்தார். சொந்த ஊரில் தனது உறவினர்களை அறிமுகப்படுத்தினார். குளத்து தண்ணீரில் குதித்து நீந்தினார். கல்லூரி மாணவர்களை சந்தித்து பேசினார்.
இவ்வளவு படங்கள் நடித்தும், சூர்யாவிடம் ஒரு அழகான கூச்சம் இருக்கிறது. மனிதர் காமிராவை பார்த்து மிக பாந்தமாக பேசுகிறார். பொதுவாகவே, நடிகர்களுக்கு காமிரா முன் நின்று, நின்று ஒரு consciousness வந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். 'நான் நடிகன். காமிரா முன் நிற்கிறேன்' என்கிற ஒரு நினைப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் சூர்யாவிடம் அது இல்லை! அழகாக, தன்மையாக பேசினார். டான்ஸ் ஆட சொன்னால் மிகவும் வெட்கப்பட்டு, இரண்டு ஸ்டெப் போட்டுவிட்டு ஓடிவிட்டார். தான் மிகவும் கூச்சசுபாவியென்றும், தானே இவ்வளவு வெற்றி பெற்றால், நிச்சயம் சாதாரண மனிதர்கள் எல்லோரும் வெற்றி பெறலாம் என்று சொன்னார். நிகழ்ச்சி choreographed என்றாலும், சூர்யா பேசியது எதுவும் பொய்யாக தோன்றவில்லை. மிகவும் பிடித்திருந்தது.

சூர்யா- மென்மை.

மீரா ஜாஸ்மின்!

வணக்கம் தமிழகத்தில் மீரா ஜாஸ்மின் பேட்டி அளித்தார். எனக்கு இவரிடமும் பிடித்தது - அழகாக தமிழில் பேசுகிறார். வார்த்தைகள் தெரியாதபோது, டி.ஸ். ரங்கநாதனை கேட்டு தெரிந்து கொண்டு, உபயோகபடுத்துகிறார். 'இமேஜ் கெட்டுவிடுமோ?' என்று பயந்து கொள்ளாமல், தப்போ தவறோ தமிழிலேயே பேசினார். அவரது credit-கு, வெகுவாக சரியாகவே பேசினார். தமிழ் நடிகைகளே, தமிழை மிக கொச்சையாக பேசும் காலத்தில், ஒரு மலையாள நடிகை தமிழை தெரிந்து கொண்டு பேசுவது மிக பாராட்டப்பட வேண்டிய விஷயம். மிக சரியாக யோசித்து பதில்கள் அளித்தார். பாடவும் செய்தார்! :))

டி.ஸ் ரங்கநாதன் பேச்சை சுவாரஸ்யமாக எடுத்து போக மாட்டேன் என்கிறார். மீரா அடுத்து மேலே என்ன சொல்லுவது என்று தெரியாமல் திணர, இவர் பாட்டுக்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்! கூட இருக்கும், இன்னொரு பெண்மணிதான் cue குடுத்து மேலே நடத்தி செல்கிறார். இம்மாதிரி பேட்டியெடுக்கும் வகையில் இருக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மனிதருக்கு சற்று presence of mind வேண்டாமோ??

மீரா ஜாஸ்மின் - ஜில்லுனு ஒரு தென்றல்! :)

பட்டிமன்றம

சாலமன் பாப்பைய்யா தலைமையிலும், லியோனி தலைமையிலும் பட்டிமன்றம் நடந்தது. நன்றாக சிரிக்க, சிரிக்க பேசினார்கள்.
அது என்ன, ஒரு பண்டிகை வந்தால் தான் பட்டிமன்றம் வைப்பார்களா? வேறு எந்த சமயத்திலும், இதெல்லாம் பேச மாட்டார்களா?

பட்டிமன்றம்- அலுப்பு!

பெப்சி உமா

பெப்சி உமா இன்றும் 'உங்கள் சாய்ஸ்' நடத்துகிறார். பொங்கலுக்காக 'திரை கண்ணோட்டம்' நடத்தினார். இன்றும், இவரது பேச்சு எனக்கு அலுக்கவில்லை. மனிதர்களை எரிச்சலூட்டுவதர்கென்றே பேசும் சில தொகுப்பாளினிகளுக்கு (உதாரணம் சன் மியூசிக் ஹேமா சிங்) இடையில், இவர் ஒரு இனிமையான மாறுதல். நல்ல குரல். அழகான உச்சரிப்பு. இயல்பான பேசும் முறை. எவனோ தெரியாத ஒருவனிடம் போய், 'உன்னுடைய மனைவியின் மிக அழகான அம்சம் எது?' என்றெல்லாம் அச்சு பிச்சென்று கேள்வி கேட்காமல் (அய்யோ, நான் பொய் சொல்லலைங்க! நெசமாவே இப்படி ஒருத்தங்க கேட்க, தொலைபேசியின் மறுமுனையில் அவர் நெளிய...என்ன கருமமடா!), contextual-ஆக பேசுகிறார். எல்லோரையும் comfortable-ஆக பீல் பண்ண வைக்கிறார். அந்த நிகழ்ச்சியை உமாவுக்காகவே உட்கார்ந்து பார்த்தேன்.

உமா - கம்பீரம்!

ரம்யா கிருஷ்ணன்

சிறப்பு 'தக தக தக தக தங்க வேட்டை' நடத்துகிறார் ரம்யா. அவரது தமிழ் உச்சரிப்பே மிக வினோதமாக இருக்கிறது. அவருக்கு, நல்ல husky குரல். அதை கத்தி, கூச்சலிட்டு பாழ்படுத்தி கொள்கிறார்! கேள்விகளோ அதற்கு மேல் அபத்தம்.

"எருமைப் பாலின் நிறம் என்ன?"

இதற்கு வேறு helpline ஒருவர் கேட்க, என்னால் தாங்கமுடியவில்லை...:(

ரம்யா - All glitter, no gold.

அஜீத்

'பரமசிவம்' படத்துக்காக மிகவும் இளைத்த, பழைய 'ஆசை' அஜீத். உடலில் நல்ல மெருகு. படம் எப்படி இருக்கிறது என்று தெரியாது.

அஜீத்- புனர்ஜன்மம்.

விஜய்யின் 'ஆதி'

விஜய் கூடிய சீக்கிரத்தில் முடி திருத்தம் செய்யவில்லையென்றால், புறா கூடு கட்டுவது சர்வ நிச்சயம். காய்ந்து, வரண்டு போன வைக்கோல் நிறம் வேறு பூசியிருக்கிறார்...:) நான் விஜய் ரசிகைதான். அதற்காக இப்படியா?? :))

12 comments:

Anonymous said...

ippadikku
Sun TV il irundhu Subhashini.

-vv

expertdabbler said...

super vettiya irukey nu ninaikiren.:)

illena ivlo programs parka mudiyadhu :)

Did u get a chance to check out dakshinachitra?

The Doodler said...

@VV,
ROTFL...:)

@PK,
Orey vetti dhaan..ella programs-um multitask panni paarthuttu irundhen..:)) I didn't check out Dakshinachitra..:( Stay in Chennai was rather brief.

Anonymous said...

Cinema Theatre-la ellam makkal enna solraanga ? Pesikaraanga ? Info plz ..

-Vasu

Anonymous said...

subha (vin pongal kurrippugal) - ma-thaa-ppu

tamil equivalent of consciousness - than'ninaivu, than'unarvu

-!r

dinesh said...

Super review !

Anandha vigadan a office time la, office la okkarandhu padicha oru thrupthi !

Vijay rasigai a nee ? worst behavior ! Sivakasi paathuma idhu ?

Zeppelin said...

phew... finally finished reading this...started a while back... :D.. however, at first I thought i went to your tamil blog site... hehe...

suresh kumar (?..not sure of the name) fan-a nee ? :)

Anonymous said...

wow..this thing is 'sagaikalla'

Arvind Srinivasan said...

I agree with your assesment on Ramya - can't bel. she sounded so-out-of-place with this non-scripted version of hosting !

Guess, compering is not everyone too ! :)

The Doodler said...

@Vasu,
Naan orey oru cinema dhaan theatre la paarthen: Aaru. Worstu movie. Chennai-la Devi Paradise la parthen...adhai pathi yaarum onnum nalla pesi naan kekkalai..:)

@!r (??!!)
:) thanks.

@Dinesh,
oru 'sivakasi' yaala Vijai rasigai illama poiduvena? :))

The Doodler said...

@zeppelin,
epdiyo unnaiyum full-a tamizh padikka vechiten..:) Who is this Suresh Kumar????!!

@anonymous,
thanks.solla vandhadhai purinjukkave konja neram aachu..:)) yaarunga neenga? :)

@Arvind,
I guess she will become better after a while..let's hope so..:)

Zeppelin said...

avan peru suresh kumar nu dhan nenekren.. does movie reviews on some tamil channel.. avan dhan oru oru padathukkum... edavadhu oru one-worder solluvan.. like for instance.. "aadhi..dadhi" .. :)